21
வரிசைகள் பலகொண்டு வந்து நின்றார்
வள்ளலின் மக்கள்மணம் காண வந்தார்
அரியபொற் கலன்கள் பல கொண்டு வந்தார்
ஆய்ந்தபட் டாடைகள் தாம்கொணர்ந்தார்.
சேரனும் சோழனும் பாண்டி மன்னும்
சேரவே சீர்களுடன் வந்த டைந்தார்பேரரசர் மூவரும் ஆங்கி ருக்க
பெற்றியுடன் வாராதார் யாரி ருப்பார் !
சிற்றரசர் எல்லாரும் சேர வந்தார்
செந்தமிழ்த் திருமணம் காண வந்தார்
பற்றுள்ள புலவர்பலர் பாடி வந்தார்
பாரியைப் பாடாத புலவ ருண்டோ !
கவிமன்னர் புவிமன்னர் கடிது வந்தார்
காதல்மிகு நன்மணம் நடக்க என்றார்
கவியரசி ஒளவைகண் காட்டி நின்றார்
கற்றகலை வாணரிசை யார்த்து நின்றார்
இன்னிசைப் பல்லியம் முழங்கு மெங்கும்
இன்பமண மாலைகள் தொங்கும் எங்கும்
கன்னலும் வாழையும் கமுகு மெங்கும்
கட்டெழில் பங்தலதில் நிறையு மெங்கும்
பாண்டியl மணவினை நடத்து கென்றார்
பைந்தமிழ்ச் செல்விபணி செய்ய லுற்றான்
ஈண்டுமங் கலமொழிகள் தான்மொ ழிந்தான்
இன்பமிகு தமிழ்மறை ஓதி நின்றான்
தெய்வீகன் மணவறை ஏறி யுற்றான்
தேவியர் இருவோரும் அருக மர்ந்தார்
செய்தமிழ்ப் பாமாலை பலர் புனைந்தார்
சேர்ந்தவர் பல்லாண்டு வாழ்க என்றார்
மணமக்கள் மணமாலை மாற்று கென்றான்
மன்னவர் மலர்மாரி சொரிய லுற்றார்
இனமக்கள் எல்லோரும் வாழ்த்தி நின்றார்
இன்பமணம் இனிதாக நடந்தே றிற்று !
மூவரும் விருந்துண்டு செல்க என்றார்
முதலில் பனம்பழம் படைக்க என்றார்
நாவரசி ஒளவையார் நல்கும் என்றார்
நற்றெய்வ வன்மையைக் காட்ட லுற்றார்.
“திங்கள் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்
மங்கைக் கறுகிட வந்துகின் றார்மணப் பந்தலிலே
சங்கொக்க வெண்குருத் தீன்றுபச் சோலை சலசலத்து
நுங்குக்கண் முற்றி அடிக்கண் கறுத்து நுனிசிவந்து
பங்குக்கு மூன்று பழந்தர வேண்டும் பனந்துண்டமே.”