="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

8

பாட்டு
பெற்றோரைப் பிரிந்திட்ட பிள்ளை
பேணிடும் உற்றோர்கள் இல்லில்
உற்றங்கு வளர்ந்தனள் நாளும்
ஒர்ந்தனள் பலகலைகள் மேலும்
கல்வியில் கலைவாணி யொத்தாள்
கற்றவர்கள் மெச்சிடப் பெற்றாள்
செல்வியாம் திருமகளை யொத்தாள்
சேயிழை பேரழகை யுற்றாள்
இசைவல்ல மெல்லியல் ஆனாள்
யாழிசையில் ஒப்பாரைக் கானாள்
நசையுள்ள நடனத்தில் வல்லாள்
நற்றமிழ்ப் புலமைகொள் நல்லாள்
நல்லிசைப் புலமைமெல் லியலாள்
நாடுறும் தமிழிசைக் குயிலாள்
வல்லவர் ஏத்துகவி சொல்வாள்
வையகம் வாழவழி விள்வாள்
முத்தமிழ்ப் புலமையும் மிக்காள்
மூதறி வாளர்புகழ் தக்காள்
வித்தகர் ஏத்திடும் அறிவாள்
விண்ணவர் போற்றுபணி புரிவாள்
கலையுரு வானகலை வாணி
கற்றவர்கள் அஞ்சுவார் நாணி
சிலைத்தங்க மானதிரு மேனி
சீர்ப்பருவ முற்றாளம் மானி

வளர்த்திட்ட பெற்றோர்கள் அன்று
வாய்த்த மணாளரைக் கண்டு
கிளர்மணம் செய்குவோம் என்று
கேட்டவர்க்குச் சொன்னார் நன்று
மணமகன் வீட்டார்கள் வந்தார்
மணம்பேசி முடிக்க விரைந்தார்
மணமகள் தனைக்காண நினைந்தார்
வளர்ப்பவர் பெண்ணரு கடைந்தார்
பணிகள்பல பூட்டியணி செய்தார்
பாவையைப் பேரழகு செய்தார்
மணம்பேச வந்தவர்கள் முன்னே
வந்திடுக என்றினிது சொன்னார்
முக்காடு போட்டங்கு வந்தாள்
முன்கோலை யூன்றியவண் வந்தாள்
அக்கணமே கண்டவர் எழுந்தார்
அன்னாளை மனம்பேசப் பயந்தார்
இச்செய்தி அறிந்தார்கள் எல்லாம்
இனிமணம் பேசவோ வல்லார்
அச்சமே கொண்டேதும் பேசார்
அவள்மனம் போல்விடக் கூசார்
உலகிற்கு நற்பணிகள் செய்ய
உடலின்பம் விட்டனள் மெய்யாய்
அலகிலாப் பேர றங் கூற
அவதரித் தாளவள் நேராய்
எல்லோர்க்கும் தாயாகிவிட்டாள்
இனியநல் லறவுரைகள் சொற்றாள்
வல்லார்க்கும் வல்லவள் ஆனாள்
வையத்தின் ஞானவொளி யானாள்
தாயான பெண்ணவ்வை என்பார்
தாரணிக் கமுதமொழி சொல்வார்

சேயாக மக்கள்தமை எண்ணி
செய்யவறம் காட்டிடுவர் நண்ணி
பெற்றோர்கள் இட்டபெயர் போச்சு
பேர்ஒளவை எனச்சொல்ல லாச்சு
உற்றோர்கள் தெய்வமென லாச்சு
உயர்தமிழ் அரசியெனப் பேச்சு
தமிழரசி ஒளவையை அறியார்
தமிழினில் ஏதுமே அறியார்
கமழ்ந்திடும் ஞானமணம் காணக்
கற்றவர்க் கவள்பாடல் வேனும்

 

வசனம்
தகடூரில் தோன்றித் தமிழ்க்கலை யாசியாய்த் திகழ்ந்து வரும் ஒளவையாரின் அருமை பெருமைகளே அந்நாட்டுச் சிற்றரசனும் பெருவள்ளலும் ஆகிய அதியமான் கேள்வியுற்றான். ஒளவையாரைத் தனது அரசவைப் புலவராக ஆக்க விரும்பினான். அரசர்களிடமும் வள்ளல்களிடமும் பரிசுபெற்றுத் தம் வாழ்க்கையை வளமுற நடத்தும் குணமுறு பாணர் குடியில் பிறந்த ஒளவையாரும் தமிழ் வள்ளலாகிய அதியமானப் புகழ்ந்துபாடிப் பரிசுபெறப் பேரார்வமுடன் இருந்தார். ஒருநாள் அவனது சபையை அடைந்து அவனைப் புகழ்ந்து பாடினார். ஒளவையாரின் அருந்தமிழ்ப் புலமையை அதியமான் அகமகிழ்ந்து போற்றினன். அவரிடத்துப் பேரன்பு காட்டினான். பரிசிலை உடனே கொடுத்தால் பைந்தமிழ்ச் செல்வியார் நம்மைப் பிரிந்து சென்று விடுவாரே என்று எண்ணிக் காலத்தை நீட்டினான். பல நாட்கள் அதியமான் அரண்மனேயில் தங்கியிருந்தும் பரிசு கிடைக்கப்பெறாத ஒளவையாருக்கு அதியமான் மீது அளவற்ற கோபம் உண்டாயிற்று. பொறுமை யிழந்தார். கொண்டுவந்த பொருள்களை மூட்டை கட்டினார். அரண்மனையினின்று வெளியே புறப்பட்டார். வாசலில் நின்ற காவலாளனைப் பார்த்து,

License

Copyright © 2018 by Creative Commons. All Rights Reserved.