="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

12

பாட்டு

தாயே! தமிழ்ச்செல்வி! தந்த இந்த நற்கனியும்
தூய தமிழ்ப்பொதிகைத் தொன்மலையில் கண்டுற்றேன்
தவமுனி இன்னருளால் சார்ந்திட்ட கனியிதனை
நவமுற உண்டவர்கள் நாட்கள் பல வாழ்ந்திடுவார்.
பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை பழுப்பதாகும்
இன்னமுத நற்கனியாம் இந்தநெல் லிக்கனியே
யானிதனை உண்டாலோ யாதுபயன் உண்டம்மா
தேனமுதத் தீங்கனியைத் தின்றுவாழ்ந் தென்னபயன்
போர்கள் பலபுரிந்து பல்லுயிர்கள் போக்கிடுவேன்
சீரமைந்த நீருண்டால் தெய்வத் தமிழோங்கும்
எண்ணரிய பன்னூல்கள் இப்புவியர் பெற்றிடுவர்
பண்ணார்ந்த இன்னறிவைப் பார்முழுதும் உற்றோங்கும்
இந்தநலம் சிந்தையெண்ணி இங்ங்னம்யான் செய்திட்டேன்
செந்தமிழ் வாழநீரும் சிறக்கவே வாழவேண்டும்
என்றினிது பேசியிட்ட இயலரசன் அதியமானின்
நன்றான பொற்குணத்தை நாவார வாழ்த்தியிட்டார்
தனிப்பெருமை சொல்லாது கருத்துள் அடக்கிகின்றாய்
தனியேன் உயிர்தழைக்க இனிதுண்ண வேண்டிநின்றாய்
சாக்காடு நீக்கமுறத் தந்துகனி உணச்செய்தாய்
தாக்கும் பகைவர்சளைத் தவிடுபொடி யாக்கிவிடும்

தாரணிந்த போர்மன்னா! தமிழ்வள்ளல் அதியமானே!
ஆறணிந்த பேரீசன் அருள்நீல மணிகண்டன்
போலவே மன்னிடுக ! பூமிதனில் புகழ்பெறுக!
காலமெலாம் இன்புற்றுக் காசினியில் வாழ்ந்திடுக!
என்றேத்தி யிருந்திட்டார் இனியதமிழ்ச் செல்வியவர்!
அன்றுமுதல் அவர்வ்நட்பு அரியசுவை நூலாச்சு
அதியமான் வீரமதும் அருள்வண்மைச் சீலமதும்
மதிவன்மை யால்பாடி மாநிலத்தை மகிழ்செய்தார்.

வசனம்
ஒளவையார் அதியமான் அரண்மனையிலேயே தங்கி, அவனுக்குத் தமிழமுதத்தைப் பலகால் ஊட்டி அவன். அரசவையை அலங்கரித்து வந்தார். அவனது சபைப் புலவராக விளங்கியதோடல்லாமல் தக்க சமயங்களில் நல் வழி காட்டும் மதிமந்திரியாகவும் இம் மாதரசி விளங்கி வந்தார். ஒளவையாரின் அரசியலறிவுப் பெருந்திறனைக் கண்ட அதியமான், தன்னே எளியவகை எண்ணித் தன்னோடு போர்கொடுத்தற்குச் சமயம் நோக்கியிருக்கும் காஞ்சித் தொண்டைமானிடத்துத் துாதுசென்று வருமாறு அன்புடன் வேண்டினான். அதியமான் பொருட்டுத் தொண்டைமானிடம் தூதுசெல்ல இசைந்தார்.

பிறநாட்டு மன்னர் பேரவைக்குத் தூதுவாய்ச் சென்று தொழிலாற்றப் பெண் ஒருத்தி பெருமையுடன் சென்றாள் என்ற சிறப்பை முதலில் பெற்ற நாடு, நம் பெருந்தமிழ்நாடே. ஒரு நாட்டு அரசியல் தூதுவர், பிற நாடுகளில் பணி செய்வதை இன்றும் நாம் காண்கின்றோம். என்றாலும் இன்று தூதுவர்களைப் பகைவர் நாட்டுக்கு அனுப்புவதில்லை. உறவுடைய நாடுகட்குமட்டுமே அனுப்புவார்கள். அந் நாடுகளோடு நட்புறவு நீங்கிப் பகைதோன்றி விட்டாலோ அங்கே அனுப்பப்பெற்ற தூதுவர் உடனே திருப்பி அழைக்கப்பட்டுவிடுவர். ஆகவே, பகை தோன்றாத வரை அது தோன்றாதிருக்குமாறு பார்த்துக்கொள்வதே இக்கால அரசியல் தூதர் ஆற்றும் பணி. உள்ள பகையைப் போக்க உழைப்பது அவர்கள் தொழிலன்று. ஆனால், பண்டைக்காலத்தில் தூதுவர் பகையரசர் அவைக்கு அனுப்பப்படுதலே மிகுதியாகும். உள்ள பகையை ஒழிக்க முயல்வதே அக்காலத் தூதுவர் ஆற்றவேண்டிய அரும் பணியாய் இருந்தது. ஆகவே, இக்காலத் தூதுவர் செய்யும் வேலையைக்காட்டிலும் அக்காலத் தூதுவர் செய்த வேலையே செய்தற்கரியது. அச்செயலை ஒரு பெண் செய்தாள் என்றால் எவ்வளவு வியத்தற்குரியது பார்த்தீர்களா! தொண்டைமானிடம் தாதுசெல்ல இசைந்த ஒளவையார் காஞ்சிமாநகரம் நோக்கிப் புறப்பட்டார்.

License

Copyright © 2018 by Creative Commons. All Rights Reserved.