="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

6

பாட்டு
சேரன் ஆண்ட செல்வநாடு
செங்குட் டுவனன்(று) ஆண்டநாடு
வீரர் பல்லோர் வாழ்ந்தநாடு
வேந்தர் புகழைக் காத்தநாடு
மலைகள் சூழ ஆளும்நாடு
மாதவர் எங்கும் தங்கும்காடு
கலைகள் எல்லாம் ஓங்கும்நாடு
கற்றவர் பல்லோர் தாங்கும்நாடு
ஆறுகள் பாய்ந்து பரவும்நாடு
யானைகள் மேய்ந்தங் குலவும்நாடு
தேறிடும் தீந்தமிழ் ஆய்ந்தகாடு
தேர்தமிழ் வாணர் வாழ்ந்தநாடு

உலப்பில் ஆனந்தம் பொங்கும்நாடு
உத்தமக் கற்பினர் தங்கும்நாடு
சிலப்பதி காரம் பிறந்தநாடு
செந்தமிழ் காத்த சேரநாடு

 

வசனம்
மலையாள நாடாகிய பழைய சேரநாட்டிலே ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னாலே – கடைச்சங்க காலத்திலே, தக்கார் பலர் வாழ்ந்த தகடுர்த் திரு நகரிலே,

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, Creative Commons has waived all copyright and related or neighboring rights to , except where otherwise noted.