ஔவையார் கதை
பாண்டியநாட்டுப் பல்வகைச் சிற்றார்களிலும் வில்லிசைப் பாட்டு இன்றும் வழங்கி வருவதைக் காண்கின்றோம். வில்லுப்பாட்டு பழந்தமிழ்மக்கள் கையாண்ட கருவூலம்.இவ் வில்லிசைப் பாட்டுவடிவில் முன்னர்த் தமிழ்வளர்ந்த கதை, திருவள்ளுவர் கதை, கண்ணகி கதை யென்பன வெளிவந்தன. நான்காவதாக இவ் ‘ஒளவையார் கதை’ வெளி வருகின்றது.புலவர் திரு. அ. க. நவநீதகிருட்டிணனவர்கள் இதனையும் முயன்று ஆக்கி உதவினார். இம் முறையில் வெளிவரும் நூல்கள் கற்றோரன்றிக் கல்வித்துறையில் கைவராத யாவரும் கற்று எளிதில் வரலாற்றுண்மைகளைத் தெளிய உதவுவதாகும்.இதனைத் தமிழ்மாந்தர் கற்று நற்பயன் பெறுவார்களென நம்புகின்றோம்
Contents
-
Front Matter
-
Back Matter
Book Information
Book Description
தென்பாண்டி வில்லிசையைத் தெய்வத் தமிழ்நாடெங்கும் பரப்பும் விருப்புடன் வெளியிட்டுவரும் வில்லுப் பாட்டு நூல்வரிசையில் நாலாவது இடம் பெற்றுள்ளது ஒளவையார் கதை. தமிழ் மூதாட்டியாகிய ஒளவையாரைப்பற்றிய கதைகள் அளவற்றன. ஒளவையார் என்ற பெயரோடு வாழ்ந்த புலவர்கள் பலர் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு.
அவர்களுள்ளே முதல் ஒளவையாரென மூதறிவாளர் போற்றும் சங்ககால ஒளவையாரின் வரலாற்றை அவர்தம் அரிய பாடல்களின் துணைகொண்டு ஒருவாறு தொகுக்க வியலும். அங்ங்ணம் நல்லறிவாளர் பலர்தொகுத்துத் தந்துள்ளனர். அவர்கள் கருத்துக்களைத் தழுவிச் சங்ககால ஒளவையாரின் வரலாற்றை வில்லுப் பாட்டாக இசைத்துத் தந்துள்ளேன். இதனைத் தமிழுலகம் ஏற்றுப் போற்றும் என்று நம்புகிறேன்.
வில்லுப்பாட்டு நூல்களை வரிசையாக அழகுற வெளியிட்டு, அத்துறையில் மேன்மேலும் என்னை ஊக்கி வரும் உயர்தமிழ்ச் சைவப்பேரன்பராய, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் திரு. வ. சுப்பையா பிள்ளையவர்கட்கு எனது உளங்கனிந்த நன்றி.
தமிழ் வெல்க !
License
ஔவையார் கதை Copyright © 2018 by Creative Commons. All Rights Reserved.