6
பாட்டு
சேரன் ஆண்ட செல்வநாடு
செங்குட் டுவனன்(று) ஆண்டநாடு
வீரர் பல்லோர் வாழ்ந்தநாடு
வேந்தர் புகழைக் காத்தநாடு
மலைகள் சூழ ஆளும்நாடு
மாதவர் எங்கும் தங்கும்காடு
கலைகள் எல்லாம் ஓங்கும்நாடு
கற்றவர் பல்லோர் தாங்கும்நாடு
ஆறுகள் பாய்ந்து பரவும்நாடு
யானைகள் மேய்ந்தங் குலவும்நாடு
தேறிடும் தீந்தமிழ் ஆய்ந்தகாடு
தேர்தமிழ் வாணர் வாழ்ந்தநாடுஉலப்பில் ஆனந்தம் பொங்கும்நாடு
உத்தமக் கற்பினர் தங்கும்நாடு
சிலப்பதி காரம் பிறந்தநாடு
செந்தமிழ் காத்த சேரநாடு