தமிழ்நாடு செய்ததீ வினையால்
தண்டமிழ்ப் புலவர்கள் வாழ்ந்த
தக்கவர லாறேதும் காணோம்
அமிழ்தென்ன அவர் தந்த பாடல்
அவைகண்டு வரலாறு நாடல்
ஆராய்ச்சி யாளர்க்குக் கேடில்
ஒளவையின் பெற்றோரைப் பற்றி
அறிதற்கு வழியில்லே சுற்றி
ஆராய்வோம் நாமதைப் பற்றி
செவ்வையாய் நோக்குவார் தெரிவார்
செந்தமிழ்ப் பலநூல்கள் அறிவார்
தேர்ந்துவரலாற்றினைப் புரிவார்
வசனம்நம் தமிழ் மூதாட்டியாராகிய ஒளவையார் அவதரித்த நாடு சேரநாடாகும். இப்போது மலையாள நாடென்று சொல்லப்படும் நாடே பழைய சேரநாடு. இதை மலைநாடு என்றே ஒளவையார் குறிப்பிடுவார். தமிழ்நாட்டின் பல பகுதிகளுடைய சிறப்புக்களையும் ஒரே பாட்டில் உணர்த்த விரும்பிய ஒளவையார், “வேழம் உடைத்து மலைநாடு” என்று தொடங்கினார். முதலில், தாம் பிறந்த நாட்டின் பெருமையையே காட்டினார். அவருடைய நாட்டுப்பற்றைப் பாருங்கள்!