1 பதிப்புரை
பதிப்புரை
பாண்டியநாட்டுப் பல்வகைச் சிற்றார்களிலும் வில்லிசைப் பாட்டு இன்றும் வழங்கி வருவதைக் காண்கின்றோம். வில்லுப்பாட்டு பழந்தமிழ்மக்கள் கையாண்ட கருவூலம்.
இவ் வில்லிசைப் பாட்டுவடிவில் முன்னர்த் தமிழ்வளர்ந்த கதை, திருவள்ளுவர் கதை, கண்ணகி கதை யென்பன வெளிவந்தன. நான்காவதாக இவ் ‘ஒளவையார் கதை’ வெளி வருகின்றது.
புலவர் திரு. அ. க. நவநீதகிருட்டிணனவர்கள் இதனையும் முயன்று ஆக்கி உதவினார். இம் முறையில் வெளிவரும் நூல்கள் கற்றோரன்றிக் கல்வித்துறையில் கைவராத யாவரும் கற்று எளிதில் வரலாற்றுண்மைகளைத் தெளிய உதவுவதாகும்.
இதனைத் தமிழ்மாந்தர் கற்று நற்பயன் பெறுவார்களென நம்புகின்றோம்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்