16
பாட்டு
பழையனூர் வேளாளன் உழையவர்க் கருளாளன்
தழைமனத் தாளாளன் விழைந்திடும் பொருளாளன்
காரி என் பானுடைய சீர்விருந் தாயமர்ந்தார்
சார்ந்தசின் னைட்பின்னர் விடைபெறச் சார்ந்திட்டார்
அன்னவன் தன்னிலத்தில் அருங்களை பிடுங்கிநின்றான்
துன்னிட்ட அவ்வையரைத் தவிர்க்கவே எண்ணிட்டான்
கையிருந்த களைக்கட்டை அவ்வையின் கைக்கொடுத்தான்வெய்யகளை நீக்கிடுவீர் வேண்டினன் என்றுரைத்தான்
காரியின் பார்வையினல் கருத்துணர்ந்த அவ்வையரும்
நேராக அதுவாங்கி நீள்களைகள் போக்கலுற்றார்
இன்றுநாம் இங்குவிட்டுச் செல்லுதற் கியலாது
என்றவ்வை உணர்வரைக்கும் சென்றவன் மீளவில்லை
அன்னவன் சூழ்ச்சிதனை அவ்வையார் தாமுணர்ந்தார்
இன்னருள் காரியவன் பொன்னைன அன்புணர்ந்தார்
உள்ளத்தில் பொங்குகவி வெள்ளத்தால் போற்றியிட்டார்
வள்ளலின் உள்ளமதை வாயார வாழ்த்தியிட்டார்.