82 யாதும் ஊரே! யாவரும் கேளிர்!
பூங்குன்றனாரைப் பார்க்க வந்தார் ஒரு நண்பர். சிட்டுக் குருவி போல் கவலையற்ற வாழ்வு வாழ வழி கூறும்படி கேட்டார். புலவர் தம் பொன்னுரையைத் தொடங்கினார்.
“எல்லா ஊரும் நம் ஊரே! எல்லோரும்: நம் உறவினர்!
தீமையும் நன்மையும் பிறர் கொடுக்க வருவதில்லை நம்மால் ஏற்படுவன!
துன்பம் வருவதும் அதைத் துடைத்துக் கொள்வதும் நம் செயலால் ஏற்படுவது
வெள்ளம் ஒடுகின்ற திசையில் மிதந்து செல்லும் தெப்பம் போல, இறைவன் எண்ணம் ஒடும் திசையில் உயிர்ப்புணை மிதந்தோடும்!
திறந்தெரிந்த நூலோரின் நற்காட்சியால் இவற்றைத் தெளிந்தோம்!
ஆதலால், இவர் பெரியர் என்று புகழமாட்டோம். இவர் சிறியர் என்று இகழவும் மாட்டோம்!
இப்படி வாழ்ந்தால் நெஞ்சத்தில் பாரம் இருக்காது. சிட்டுக் குருவிபோல் எட்டுத் திக்கும் ஒடிக்களிக்கலாம்.