8 ஞாயிறும் திங்களும்
7. ஞாயிறும் திங்களும்…
கதிரவன் எழுகின்றான், வெம்மையைச் சொரிகிறான், சுடுகின்றான். கோடை நாளல்லவா? அவன் கொடுமையைக் கேட்கவா வேண்டும்.
அரசே, நீயும் அத்தகையவன்… கோடைக் கதிரவன் போல் சுடுகின்றாய்…
ஆனால் ஒன்று-குடிகளை அல்ல. கொடும் பகையை!
உன் கொடிய கைகளை கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம். ஏனெனில், எங்களிடம் இரவில் எழும் திங்கள் போல் வருகின்றாய்!
சுட்ட கைகள், குளிர்கின்றன, வெம்மை சொரிந்த கண்கள், அருள் சொரிகின்றன…
ஆதலின், ஞாயிறும் நீ, திங்களும் நீ.