="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

40 எது உடைமை

40. எது உடைமை?

மலையமான் திருமுடிக்காரி வரையாது கொடுக்கும் வள்ளல். அவனைக் காணச் சென்றார் கபிலர். நெஞ்சம் நெகிழ்ந்து வாழ்த்தினார்:

“திருமுடிக்காரியே! நாட்டில் உனக்கு உடைமையானது எது?

பண்டு தொட்டு நின் நாட்டைக் கடல் கவர்ந்து கொள்ளவுமில்லை…. பகைவர் கைப்பற்றவுமில்லை… ஆனால், பாடி வரும் பரிசிலர் உன் நாட்டைக் கைப்பற்றினார்கள்…

உனக்கு உடைமை எது?

உன் மனைவியின் மெல்லிய தோள்…

உன் நாடு?-அது பொதுவுடமை!

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, manarkeni has waived all copyright and related or neighboring rights to எது உடைமை, except where otherwise noted.

Share This Book