10 எதிர்த்து நிற்போர் யார்?
9. எதிர்த்து நிற்போர் யார்?
போர்ப் படை புறப்பட்டு விட்டது. நற்கிளி தலைமை தாங்குகிறான்…
ஊழிக் காலம் போல், வானம் இருள்கின்றது. கொடிகள், திசைகளை மூடுகின்றன…
ஏழு கடல்களும் அடி பெயர்ந்து செல்வது போற் படை முழங்குகின்றது. வேல்கள், விண்முகட்டைக் கிழிப்பது போன்று நீண்டு மின்னி வெட்டுகின்றன…யானைகள் முழங்குகின்றன. இடிமுழக்கம் கேட்கிறது…
இப்படையை எதிர்ப்போர் யார்? ஊழிப் புயல் முன் நிற்போர் யார்? பாவம், அவர்கள் இரங்குதற்குரியர்