="http://www.w3.org/2000/svg" viewBox="0 0 512 512">

3 விமர்சனம்

கம்பராமாயணம்

அமரகவி பாரதியாரால் பாராட்டப் பெற்ற கம்பனின் காவியமான கம்பராமாயணம் இன்றைய உரைநடை உலகத்தில் புதிய உருவெடுத்து ‘உரை நடை’ நூலாக வெளி வந்துள்ளது.

சிலபேர் உரை நடையைக் கவிதையாக்கிக் கொண்டிருக்கிற இக்கால கட்டத்தில் உரைநடை ஆசிரியர் கவித்துவமான வரிகளை உரைநடையின் பெயரில் காவியச் சுவை குன்றாமல் செறிவான வரிகளுடன், நளினமான வார்த்தைக் கோப்புகளுடன் வளமையான தமிழில் வழங்கியுள்ளார் இலக்கிய சோதனைக்காரர் ‘பேராசிரியர் ராசீ’.

இவரின் புதுமுயற்சி வெற்றிபெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும். தெளிவான சிறந்த சொல்லாட்சி ஆசிரியரின் வெற்றிக்கு அடிப்படைக் காரணமாகும்.

இன்றியமையாத தருணங்களில் மட்டுமே ‘கவிதை வரிகள்’ கண் சிமிட்டுகின்றன. மற்றபடி நூலெங்கும் உரைநடை ராஜ நடை போடுகிறது. பண்டித தமிழிலன்றிப் பழகு தமிழில், சுவைபட எழுதப்பட்டுள்ளதால் நூலின் பக்கங்கள், நம் விரல் துடுப்புகளில் விரைந்து தள்ளப்படுகின்றன. தொய்வில்லாத ஆற்றொழுக்கான உரைநடை.

காட்சிகள் கண் முன்னே உயிர்பெற்று உலவும் அதிசயத்தை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்; இதனை மிகச் சிறந்த உலக அளவிலான நாடக நூல் என்று அறுதியிட்டுக் கூறலாம். பாராட்டு கம்பனுக்கு மட்டுமல்ல; போராசியர் ராசீக்கும் தான். உரையின் சிறப்புக்குச் சான்று:-

இதோ:-அனுமனிடம் சீதை கூறியது

“தாரம் அல்லள் என்று சொல்லி என்னை ஒரம் கட்டலாம். அதற்காகத்தன் வீரம் காட்டாமல் இருப்பது அவன் ஆண்மைக்கு இழுக்கு என்பதை நினைவுறுத்து…..” என்றாள்.

“வாழ்வதா, வீழ்வதா என்பதுதான் என் வாழ்க்கைப் பிரச்சனை” என்றாள்.

மொத்தத்தில் அனைவருக்கும் பயனளிக்கும் நூல்; சிறந்த முயற்சி; பாராட்டுக்கள்.
எம்.எஸ். தியாகராஜன்

சீரை சுற்றித் திருமகள் முன் செல
முரிவிற்கை இளையவன் பின் செலக்
காரை யொத்தவன் போம்படி கண்ட அவ்
ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்னுமோ

License

Icon for the Public Domain (No Rights Reserved) license

To the extent possible under law, ரா.சீனிவாசன் has waived all copyright and related or neighboring rights to விமர்சனம், except where otherwise noted.